அவசர சிகிச்சை பிரிவில் சமந்தா...என்னாச்சு இவருக்கு, ரசிகர்கள் சோகம்

Samantha Actress
By Tony Jan 15, 2024 05:30 AM GMT
Report

சமந்தா தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து நீதானே பொன் வசந்தம், பானா காத்தாடி ஆகிய படங்கள் இவரின் கெரியரில் மிக முக்கிய படங்களாக அமைந்தது.

பிறகு நாக சைதன்யா-வுடன் காதல், திருமணம் தெலுங்கிலேயே செட்டில் என வாழ்க்கை செல்ல, ஒரு கட்டத்தில் இவர் நாக சைதன்யா-வை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தார்.

அவசர சிகிச்சை பிரிவில் சமந்தா...என்னாச்சு இவருக்கு, ரசிகர்கள் சோகம் | Samantha Admitted In Emergency Ward For Allergy

அதை தொடர்ந்து இவர் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, சினிமாவில் நடிப்பதில் சிரமப்பட்டு இருந்தார், தற்போது இவர் செய்த பதிவு ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

இதில், பூக்கள் எவ்வளவு அழகானது அவற்றை பார்த்தால் மனதுக்குள் இனம் புரியாத சந்தோஷம் வரும். ஆனால் பூக்களால் உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது கொடுமையானது என்று கூறியுள்ளார்.