சமந்தாவின் அந்த புகைப்படத்தை வெளியிட்ட தோழியின் கணவர்!! ஷாக்காகும் ரசிகர்கள்..
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து முன்னணி நடிகரளுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சமந்தா 2017ல் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 4 வருடத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்துக்கு பின் படங்களில் பிஸியாகவும் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
கடந்த ஆண்டு தனக்கு மயோசிடிஸ் என்ற அரியவகை நோய் இருப்பதாகவும் அதனால் படுத்த படுக்கையில் இருந்து நடக்கக்கூட கஷ்டப்பட்டதாகவும் தெரிவித்தார். அதற்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று இடையில் படங்களில் நடித்தும் வந்தார்.
தற்போது மீண்டு வரும் சமந்தா இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். ஷூட்டிங்கில் ஏற்பட்டபோது சமந்தாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை சமந்தா சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 13 ஆண்டுகளாகிய நிலையில் அவரது நண்பரும் பாடகி சின்மயின் கணவருமான ராகுல் சமந்தாவின் இளமைப்பருவ புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
13 வருடத்திற்கு முன் நடிகை சமந்தா எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நம்ம சாம்-ஆ இது என ஷாக்காகி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Look at this photo I found… @Rohit_Ravindran clicked it 14 years back on our terrace:) Congratulations on 13 years Sammy… here’s to many more decades ?? https://t.co/rlYoEvhMaG pic.twitter.com/RQ196MDeud
— Rahul Ravindran (@23_rahulr) February 26, 2023