இறுக்கமான டீசர்ட்டுடன் ஆட்டம்!! ஒரு வருஷம் கழித்து அந்த விசயத்தை செய்த நடிகை சமந்தா...
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது பாலிவுட் சினிமா வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு 4 வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அதன்பின் படங்களின் கவனம் செலுத்தி இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் உச்சக்கட்டம் காட்டி நடிக்க ஆரம்பித்தார். பின் மயோசிடிஸ் என்ற தசை சம்பந்தமான அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டும் வந்தார்.
பல மாதங்களாக அதற்கு சிகிச்சை மேற்கொண்டும் படங்களில் இதற்கிடையில் நடித்தும் வந்தார். இதற்காக சில காலம் சிகிச்சை மேற்கொண்டு ஓய்வெடுக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. தற்போது தோழிகளுடன் இந்தோனேசியாவிற்கு சென்று ஆன்மீக பயணத்துடன் உல்லாசமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சமந்தா மயோசிடிஸ் நோய் வந்ததில் இருந்து ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை போட்டு ஒரு வருடங்களுக்கு மேலாகியுள்ளது. கடைசியாக பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு ஆடி ரீல்ஸ் வீடியோ பகிர்ந்தார்.
பின் விளம்பர ரீல்ஸ் வீடியோ மட்டுமே பகிர்ந்து வந்த சமந்தா தற்போது தோழியுடன் இறுக்கமான டீசர்ட் - ஷார்ட் ஸ்கிட் அணிந்து ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.