நாகசைதன்யா மீது இவ்வளவு கோபமா! விவாகரத்திற்கு பின் கண்டுகொள்ளாத நடிகை சமந்தா..

samantha divorce nagachaitanya tamilactress tollywoodactor akkinenifamily
By Edward Dec 29, 2021 03:46 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் தான் நடித்த படங்கள் தன் கணவரின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவாகரத்திற்கு பிறகு ஆடைகள் அணிவதிலும் படங்களில் நடிப்பதிலும் தன்னை கட்டுப்படுத்த யாரும் இல்லை என்று தாராளம் காட்டி ஷாக் கொடுத்து வருகிறார் சமந்தா.

இந்நிலையில், சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தெலுங்கு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இருவரும் அவர்களின் படத்தின் ஷூட்டிங்கிற்காக ராம நாயுடு ஸ்டுடியோவிற்கு சென்றிருந்தனர். முன்னாள் கணவரையும் அவர் குடும்பத்தினரையும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்.

அந்தவகையில் சமந்தா கணவரை ஒரே ஸ்டியோவில் இருந்தும் Eye Contact இல்லாமல் கண்டுக்கொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி அவர்கள் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

அதேசமயம் விவாகரத்து செய்தியை சமந்தா வெளியிட்ட அறிக்கையில் 10 வருட நட்பு 4 வருட வாழ்க்கைக்கு பிறகும் நாங்கள் நண்பர்களாக இருப்போம் என்று கூறியிருந்தார்.

அப்படியிருக்கையில், சமந்தா மற்றும் நாக சைதன்யா ஒரே ஸ்டியோவில் இருந்தும் பார்க்காமல் வந்திருப்பது தான் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதிலிருந்து சமந்தா, நாக சைதன்யா மீது இவ்வளவு கோபத்தில் இருக்கிறார் என்று தெரியவருகிறது.