திருமணத்திற்கு மட்டுமே கோடிக்கணக்கில் செலவு.. ஆனால் இப்போ விவகாரத்தா
samantha
nagachaithanya
By Kathick
நடிகை சமந்தா முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் தற்போது இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரியப்போவதாக இணையத்தில் பெரிதளவில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும், இருவரும் வெளியிடவில்லை. இதுகுறித்து கேள்வி எழுந்தபோதும், விவாகரத்து குறித்து வரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று கூறிவிட்டனர்.
இந்நிலையில் நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் திருமணத்திற்கு மட்டுமே சுமார் ரூ.10 கோடி வரை செலவு ஆனது என்று தகவல் கூறப்படுகிறது.