நடிகரிடம் 25 கோடி வாங்கி! என்னை பாத்துக்க எனக்கு தெரியும்!! கோபத்தின் உச்சிக்கு சென்ற நடிகை சமந்தா..
தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருப்பவர் சமந்தா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சாகுந்தலம் படத்திற்கு ரசிகர்கள் படு மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இதையடுத்து சிட்டாடல் என்ற வெப் தொடர் ஒன்றில் நடித்து வந்த சமந்தா, சினிமாவில் இருந்து சற்று விலகுவதாக சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் பிரபல நடிகரிடம் இருந்த சமந்தா ரூபாய் 25 கோடி கடன் வாங்கியுள்ளாராம்.
ஆனால் அந்த நடிகர் யார் என்று தெரியவில்லை. ஒரு வேலை நோயால் அவதிப்பட்ட அவதிப்பட்டதால் சிகிச்சைகாக இப்படி கடன் வாங்கி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த செய்தி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சமந்தா இதனால் கடும் கோபத்திற்கு ஆளாகி ஒரு பதிவினை காட்டமாக பதிவிட்டுள்ளார்.
மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்கு 25 கோடியா. உங்களை யாரோ ஏமாற்றி இருக்கிறார்கள். நான் அதில் ஒரு சின்ன தொகையை தான் செலவு செய்கிறேன்."
'நான் இத்தனை காலம் என்ன சம்பாதித்தேன் என நினைக்கிறீர்கள். என்னை எனக்கு பார்த்து கொள்ள தெரியும்.'
'இந்த நோய் பல ஆயிரம் பேருக்கு வருகிறது. சிகிச்சை பற்றி தவறான செய்தி பரப்பாதீங்க” என்று பதிவிட்டுள்ளார் நடிகை சமந்தா.

