18+ கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தா.. அதுவும் இந்த நிகழ்ச்சியில் தெரியுமா

Samantha
By Kathick Jun 09, 2022 05:17 PM GMT
Report

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'காஃபி வித் கரண்'. இதன் புது சீசனுக்கான படப்பிடிப்பை முடித்துள்ளது. பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோகர் 'காஃபி வித் கரண்' என்ற டாக் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.

எப்போதும் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் இந்த புது சீசனில் தெலுங்கில் இருந்து சமந்தா, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். இதில் முதல் ஆளாக கலந்துகொண்டுள்ளார் நடிகை சமந்தா.

எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை துவங்கியுள்ள காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பல 18+ கேள்விகள் கேட்டகப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு சமந்தா பதிலளித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.