பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நடிகை சமந்தாவின் காட்சிகள்! கண்டபடி திட்டும் ரசிகர்கள்..

samantha FamilyMan2
By Edward Jun 04, 2021 06:18 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து பின் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதுவரையில் எந்தவித சர்ச்சை கதாபாத்திரங்களிலும் நெருக்கமான படுக்கை காட்சிகளிலும் நடிக்காமல் இருந்து வந்தார் சமந்தா.

சமீபத்தில் கொரோனா வைரஸ் பிரபலங்களை வெப்சீரிஸ் பக்கம் இழுத்து வருவதை தொடர்ந்து நடிகை சமந்தாவும் நடித்து வருகிறார். அந்தவகையில் சில தினங்களுக்கு முன் நடிகை சமந்தா நடித்த ஃபேமிலி மேன் 2 படத்தின் டிரைலர் வெளியாக பலரின் கண்டனங்களை எதிர்கொண்டது. படம் ரிலீஸ் ஆகுமா என்ற நிலையில் இருந்தது.

ஆனால், எதிர்பாராத வகையில் படம் ஜுன் 2ல் ஓடிடி தளத்தில் வெளியாகியது. இலங்கை தமிழ் போராளி ராஜி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமந்தாவின் படுக்கை அறை காட்சிகளும், பேருந்தில் சமந்தா அனுபவிக்கும் கொடுமையான காட்சிகளும் சமூக வலைதளங்களில் வீடியோக்களாக வைரலாகி வருகின்றன.

இதை பலர் எதிர்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பேருந்துல் பெண்கள் பாலியல் ரீதியாக கஷ்டப்படுவதையும் உண்மையான காட்சியாக எடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியும் உள்ளது.