விவாகரத்துக்கு பின் இப்படியொரு முடிவு.. முன்னாள் கணவரை பழிவாங்க சமந்தா போட்ட பிளான்

Samantha Naga Chaitanya
By Edward Jul 28, 2022 09:24 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்டார். விவாகரத்துக்கு பின் தன் வேலையில் நல்ல கவனம் செலுத்தி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.

விற்கப்பட்ட வீடு

விவாகரத்துக்கு பின் அதிக மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்ட சமந்தா, மாஜி கணவர் வீட்டில் 250 கோடி ஜீவனாம்சம் கொடுத்தார்களா என்ற ரூமர் செய்தியை கேட்டு ஷாக்காகியதாகவும் வருமான வரித்துறையினருக்கா காத்திருந்ததாகவும் கூறியிருந்தார்.

விவாகரத்துக்கு பின் இப்படியொரு முடிவு.. முன்னாள் கணவரை பழிவாங்க சமந்தா போட்ட பிளான் | Samantha Buy Same House Again High After Divorce

இந்நிலையில் விவாகரத்துக்கு முன் நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் ஹைதராபாத்தில் இருந்த வீட்டினை கோடியில் விற்றுவிட்டு தனித்தனி வீட்டினை வாங்கி வசித்து வந்தனர். நடிகை சமந்தா பாலிவுட் படங்களில் நடிக்கவுள்ளதால் மும்பை வீடு வாங்கவுள்ளார் என்ற செய்திகளும் பரவியது.

மீட்டெடுத்த சமந்தா

இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் முரளி மோகன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விவாகரத்துக்கு பின் சமந்தா, நாக சைதன்யா அவர்கள் வசித்த வீட்டினை கோடியில் விற்றுவிட்டனர். தற்போது அதே வீட்டினை கூடுதல் பணம் கொடுத்து சமந்தா வாங்கியுள்ளார் என்ற செய்தியை கூறியுள்ளார். கூடிய சீக்கிரமே அங்கு குடியேறுவார் என்றும் கூறியுள்ளார்.