புதிய வீட்டில் காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா.. புகைப்படத்தை பாருங்க
Samantha
By Kathick
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சமந்தா. இவர் தற்போது மும்பையில்தான் முழுநேரம் இருக்கிறார்.
பாலிவுட் திரையுலகில் அதிகம் கவனம் செலுத்தி வருவதால், அவர் அங்கேயே புதிய வீடு வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், தனது புதிய வீட்டில் நடிகை சமந்தா தீபாவளியை கொண்டாடியுள்ளார்.
காதலர் என கிசுகிசுக்கப்படும் இயக்குநர் ராஜ் நிடிமுரு உட்பட மற்ற நண்பர்களும் சமந்தாவுடன் இருக்கிறார்கள். மேலும் தனது வீட்டின் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார்.
தனது வீட்டில் ஆன்மீகத்துக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் சமந்தா. திருப்பதி ஏழுமலையான் கோவில் புகைப்படம், பெரிய சிலை, ஆதியோகி சிலை என பல விஷயங்களை அவர் வீட்டில் வைத்திருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம் பாருங்க..














