நினைத்ததை நடத்தி காட்ட போராடும் நடிகை சமந்தா!! விவாகரத்துக்கு பின் இப்படியொரு மாற்றம்
நடிகை சமந்தா நாகசைதன்யாவை விவாரகத்து செய்து பிரிந்தப்பின் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீபத்தில் யசோதா, சாகுந்தலம் படம் வெளியாகி வசூல் ரீதியாக சில தோல்வியை சந்தித்தார் சமந்தா. இதற்கு முன் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டும் வந்தார். இதற்கிடையில் படப்பிடிப்பினையும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது குஷி, சென்னை ஸ்டோரி மற்றும் சிடடெல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். சமந்தாவின் கேரியரின் ஆரம்பத்தில் நடித்த படங்கள் சரியான எதிர்பார்ப்பை பெறவில்லை. இதனால் சில காலம் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததும் மிகப்பெரிய அடியாக அமைந்தது. அவரின் சினிமா வாழ்க்கையில் கத்தி படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்தும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தும் வந்தார். என்ன தான் விவாகரத்து செய்தாலும் சினிமாவில் கவனம் செலுத்த தீவிரம் காட்டி வெற்றிபடங்களை கொடுத்து வந்தார்.
இதற்கிடையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டு தீவிர சிகிச்சை, உடற்பயிற்சியில் இறங்கி மீண்டு வருகிறார். நோயின் தாக்கம் அதிகரித்தாலும் படங்களில் கவனம் செலுத்துவதை விடாமல் தற்போது பூரணமாக குணமடைந்து பல படங்களில் நடித்து வருகிறார். எப்படியாவது நினைத்ததை நடத்திக்கட்ட வேண்டும் என்ற வைராக்கியம் சமந்தாவுக்கு இருக்கிறது என்று பலர் பாராட்டியும் வருகிறார்கள்.