12 வருட சினிமா வாழ்க்கையில் கிடைச்சது இதுதான்? நடிகை சமந்தா உருக்கம்
தென்னிந்திய சினிமாவில் குறுகியகாலகட்டத்தில் மிகப்பெரிய இடத்தினை பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி பல நடிகைகள் அந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள். அதில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார்.
இதையடுத்து தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படத்தில் கமிட்டாகி கொடிக்கட்டி பறந்தார். சமீபத்தில் காதல் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்து, ஐட்டம் பாடல், க்ளாமர் ஷூட் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார். இன்றோடு அவரின் சினிமா வாழ்க்கையில் 12 வருட காலத்தினை காலெடி எடுத்து வைத்துள்ளார்.
அதற்கு சமந்தா தனது சமுகவலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவினை போட்டுள்ளார். லைட்ஸ் கேமரா அக்ஷன் மற்றும் ஒப்பந்த தருணங்களை இந்த 12 வருடங்களாக உணர்ந்து வந்தேன்.
இந்த உலகத்தில் பலரின் அசீர்வாத்தோடு இருந்த இந்த பயணத்தில் விசுவாசமான ரசிகர்களை பெற்றுள்ளேன். எனது காதல் கதை சினிமாவில் எப்போது முடிவடையாது. எனக்கு அது வலிமையில் இருந்து வலிமைக்கு பலமாக இருக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.