நாகசைதன்யாவுடன் விவாகரத்து ஆன பின்பு இப்படியா.. நடிகை சமந்தா செய்த செயல்

samantha divorce movies nagachaithanya
By Kathick Oct 19, 2021 12:20 PM GMT
Report

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து பெற்றுக்கொண்டு, பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். சமந்தா படங்களில் கவர்ச்சியாக நடிப்பது தான் விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால், படங்களில் நடிப்பதை குறைத்திருந்த சமந்தா, விவாகரத்துக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர், தற்போது மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒன்று பாலிவுட் படம். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும்.

மேலும் அவர் நடிக்க உள்ள மற்ற இரண்டு படங்களும் சமந்தாவை முன்னிலைப்படுத்தி கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்களாக தயாராகின்றன. இந்த இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராக உள்ளன. விவாகரத்து ஆன பின்பு உடனடியாக நடிகை சமந்தா இப்படியொரு அதிரடி முடிவு எடுத்திருப்பது அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.