விவாகரத்து குறித்து சமந்தாவின் தந்தை அதிர்ச்சி! இதை தான் கூறினாராம்!
samantha
divorce
nagachaitanya
akkineni
josephprabhu
By Jai
தென்னிந்திய சினிமாவில் தற்போது டிரெண்டாகி வரும் செய்தி என்றால் அது சமந்தா - நாக சைதன்யாவின் விவாகத்து செய்தி தான். பல நாட்களாக வதந்திகள் என்று கூறி வந்த இருவரும் தற்போது 4 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொள்கிறோம் என்று அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டனர்.
இதுதொடர்பாக ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் விமர்சித்து வந்ததை அடுத்து நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு கருத்து ஒன்றினை கூறியுள்ளது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. அவர் கூறியது, மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், திருமணத் தகராறு குறித்து தெரியும் என்பதால் நிலைமை சீராகிவிடும் என நம்பினாராம்.
ஆனால் அப்படி நடக்கவில்லை.
அவரின் மகளுக்கு ஆதரவாக பேசிய ஜோசப் பிரபு சமந்தா இந்த முடிவை எடுப்பதற்கு முன் நிறைய யோசித்திருப்பார் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.