அந்த பையன் வாழ்க்கையே..அப்படியே நொறுங்கிட்டேன்!! நடிகை சமந்தாவின் எமோஷ்னல் பதிவு..
Samantha
Tamil Actress
Actress
By Edward
சமந்தாவின் எமோஷ்னல்
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ராகிங் செய்யப்பட்ட சக மாணவர்களால் மிஹிர் அகமது என்ற மாணவர் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட விஷயம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மிஹிர் அகமதுவின் தாயார், சக மாணார்கள் ராகிங் என்ற பெயரில் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டதாகவும் கழிப்பறை இருக்கையை கட்டாயப்படுத்தி நக்க வைத்ததாகவும் தலையை அதற்குள் புகுத்தியதாகவும், என் மகன் இறந்ததை கொண்டாடியதாகவும் கூறி ஒரு பதிவை போட்டுள்ளார்.
இதனை அறிந்த நடிகை சமந்தா, இந்த செய்தி என்னை முற்றிலும் நொறுக்கிவிட்டது என்றும் வெறுப்பும் விஷமும் நிரம்பிய ஒருசில தனிநபர்கள் ஒருவருக்கு இழைத்த கொடுமையால் மற்றொரு பிரகாசமான இளைஞரின் வாழ்க்கையை நாம் இழந்துவிட்டோம் என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா.