பல லட்சம் மதிப்புள்ள நிச்சய மோதிரம்.. சமந்தா செய்ததை பாருங்க
சமந்தா
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சமந்தா.
மாடலிங் துறையில் வெறும் ரூ. 500க்கு சம்பளமாக பெற தொடங்கி தற்போது பல கோடி சம்பளம் பெறும் நடிகையாகவும், பலருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் முதலாளியாகவும் உயர்ந்துள்ளார்.
நடிப்பு, தொழில் என பிஸியாக வலம் வந்தவருக்கு பெரிய தடையாக அமைந்தது மயோசிடிஸ் என்ற நோய் பாதிப்பு. தற்போது கொஞ்சம் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு நடிக்க தொடங்கியுள்ளார்.
தனது சொந்த வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந்தித்த சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.
இப்படியா செய்தார்
கடந்த சில வருடங்களுக்கு முன் தனது திருமண உடையை கருப்பு நிறத்தில் மாற்றி புதிய உடையாக அணிந்திருந்தார். தற்போது ரூ. 48 லட்சம் மதிப்புள்ள நிச்சயதார்த்த மோதிரத்தை சமந்தா ஒரு பெண்டெண்டாக மாற்றியுள்ளார்.