விவாகரத்து கேட்டது சமந்தா? மகன் விவகாரத்தில் கோபத்தில் தந்தை
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா பல ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கையில் 4 காலம் நிறைவடைந்த நிலையில் சமந்தா நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்யவுள்ளோம் என்ற செய்தியை வெளியிட்டனர்.
இதுகுறித்து பல காரணங்கள் எழுந்த நிலையில், நாக சைதன்யாவின் தந்தை முதன்முதலாக கருத்து தெரிவித்துள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி பரவியது. அதில் முதலில் விவாகரத்து கேட்டது சமந்தா தான்.
இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள் என்றும் எப்படி இடையில் பிரச்சனை வந்தது என்று எனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தாராம். மேலும் இதனால் தந்தை வருத்தப்படுவாரே என்று நாக சைதன்யா கவலையில் இருந்ததாகவும் நாகர்ஜுனா தெரிவித்ததாக ஒரு செய்தியை கிளப்பினர்.
ஆனால் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று நாகர்ஜுனா டிவிட்டர் பதிவில் கோபத்துடன் பதிவிட்டுள்ளார். சமந்தா நாக சைதன்யா விவாகரத்து குறித்து நான் எந்த பேட்டியையும் கொடுக்கவில்லை.
ஊடகங்களிலும் சமுகவலைத்தளங்களிலும் நான் கூறியதாக செய்திகள் பரவியது முட்டாள்தனமாகும். இதுபோன்ற வதந்தி செய்திகளை பதிவிடக்கூடாது என்று ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
The news in social media and electronic media quoting my statement about Samantha & Nagachaitanya is completely false and absolute nonsense!!
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) January 27, 2022
I request media friends to please refrain from posting rumours as news. #GiveNewsNotRumours