அரியவகை நோயால் நடக்கமுடியாத நிலை!! சிகிச்சைக்கு பின் நடிகை சமந்தா செய்த செயல்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை சமந்தா.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் கதாநாயகியாக நடித்த சமந்தா, தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி முன்னணி நடிகையாக கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

விவாகரத்து - மயோசிடிஸ்
நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து விவாகரத்து பெற்றார். அதன்பின் படங்களில் நடிக்க ஆரம்பித்த சமந்தா, கிளாமர் லுக்கிலும் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார்.
8 மாதங்களாக தான் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக படுத்த படுக்கையில் இருந்து நடக்கமுடியாமல் கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். அதற்கான சிகிச்சைகளும் உடற்பயிற்சிகளும் செய்து வந்த சமந்தா தற்போது தான் பழைய நிலைக்கு மாறி வருகிறார்.

பழனி முருகன்
உடல் எடையை குறைத்து முகம் மாறி அடையாளம் தெரியாமல் மாறிய சமந்தாவை பார்த்து பலர் ஷாக்காகி வந்தனர். சமீபத்தில் கடினமாக உடற்பயிற்சி செய்த வீடியோவையும் வெளியிட்டார்.
இந்நிலையில் உடல்நிலை சீரான பழனி முருகன் கோவிலுக்கு சென்று 600 படிகளில் சூடம் ஏற்றி வழிபட்டுள்ளார். படிகளில் குனிந்தபடி சூடம் ஏற்றிய சமந்தாவை பலர் பாராட்டியும் இந்த நேரத்தில் இது ஏன் என்று சமந்தா ரசிகர்கள் கருத்துக்களை கூறியும் வருகிறார்கள்.
