நீங்க என்ன பெரிய டாக்டரா!! மோசமாக விமர்சித்த டாக்டரால் கடுப்பாகி பதிலடி கொடுத்த சமந்தா.

Samantha Gossip Today Tamil Actress Actress
By Edward Jul 05, 2024 06:53 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வரும் சமந்தா, இடையில் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை மேற்கொண்ட போதிலும் படங்களில் பிஸியாகவும் நடித்து வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வரும் சமந்தா, பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார்.

நீங்க என்ன பெரிய டாக்டரா!! மோசமாக விமர்சித்த டாக்டரால் கடுப்பாகி பதிலடி கொடுத்த சமந்தா. | Samantha Gives Big Explanation To A Doctor Trolls

மேலும் மயோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையும் மேற்கொண்டு வரும் சமந்தா, பாட் காஸ்ட் மூலம் மருத்துவம் பற்றிய சிகிச்சைகள் குறித்து பேசி வருகிறார். நெபுலைசர் கருவியை தனது மூக்கில் வைத்தவாறு, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்பது என புகைப்படத்தோடு அந்த பதிவினை பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ஒரு மருத்துவர், சமந்தா சொல்லும் சிகிச்சை தவறானவை, அவரை சிறையில் தள்ள வேண்டும் என்று பொங்கியிருக்கிறார். இதனால் கடுப்பாகிய சமந்தா, 3 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு சொன்ன அனைத்தையும் நான் செய்தேன். பரிந்துரைகள் மிகவும் தகுதி வாய்ந்த நிபுணர்களிடம் இருந்து வந்தவை. தனிப்பட்ட ஆராய்ச்சி செய்த பின் இந்த சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இது மிகவும் விலை உயர்ந்தவை. இதனை வாங்க முடியாதவர்கள் பற்றி அடிக்கடி யோசித்திருக்கிறேன். வழக்கமான சிகிச்சை என்னை குணப்படுத்தவில்லை.

நீங்க என்ன பெரிய டாக்டரா!! மோசமாக விமர்சித்த டாக்டரால் கடுப்பாகி பதிலடி கொடுத்த சமந்தா. | Samantha Gives Big Explanation To A Doctor Trolls

மற்றவர்களுக்கு அது பலன் கொடுத்திருக்கலாம். அதனால் மாற்று சிகிச்சை பற்றி ஆராய ஆரம்பித்து கடைசியாக பிரமாதமான சிகிச்சையை கண்டறிந்தேன். டிஆர்டிஓ-வில் 25 ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவரால் இந்த சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் ஒரு ஜென்டில்மேன், அவரும் ஒரு டாக்டர் என நினைக்கிறேன். என் பதவியையும் நோக்கங்களையும் கடுமையான வார்த்தைகளால் என்னை விமர்சித்தார்.

என்னை விட அவர் அதிகம் அறிந்தவர் என்பதில் சந்தேகம் இல்லை. அவருடைய நோக்கம் உன்னதமானது. அவர் தனது வார்த்தைகளால் மிகவும் என்னை கஷ்டப்படுத்திவிட்டார். என்னை சிறையில் தள்ள வேண்டும் என்று கூறுகிறார். நான் ஒரு பிரபல நடிகையாக இருப்பதால் தான் என் மீது அவருக்கு இப்படியொரு வன்மமோ என தெரியவில்லை.

நீங்க என்ன பெரிய டாக்டரா!! மோசமாக விமர்சித்த டாக்டரால் கடுப்பாகி பதிலடி கொடுத்த சமந்தா. | Samantha Gives Big Explanation To A Doctor Trolls

அதனால் நான் நேரடியாக டீல் செய்யாமல் என் மருத்துவரையும் அந்த மருத்துவரையும் இதுபற்றி விவாதிக்க வைத்தால் பிரச்சனை தீரும் என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார். இதற்கு பலர் ஆதரவாக சமந்தாவின் பதிவிற்கு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGallery