அந்த படத்துக்காக இத்தனை கோடி சம்பளமா!! மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் கோடியில் புறளும் சமந்தா..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன் சித்தார்த்துடன் நெருக்கமாக இருந்து பொது இடங்களுக்கு ஜோடியாக சென்று காதலித்தும் வந்தனர்.
அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாட்டு ஏற்பட்டு, சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு வந்த சமந்தா தற்போது தீவிர சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டு வருகிறார். மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்திலும், பாலிவுட் நடிகருடன் சிடடெல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
சமந்தா ஒரு படத்திற்காக 4 முதல் 5 கோடி சம்பளமாக பெற்று வந்தார். அதிலும் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு மட்டுமே 5 கோடி சம்பளமாக பெற்றார்.
இந்நிலையில், சிடடெல் தொடரில் நடிக்க சமந்தா ரூபாய் 10 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறாராம். பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக நடிகை சமந்தா சம்பளம் வாங்கியுள்ளது தென்னிந்திய சினிமா நடிகைகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.