’ஓ சொல்றியா மாமா’ பாட்டால் எகிறிய மார்க்கெட்.. விவாகரத்துக்கு பின் கோடியில் புரளும் நடிகை சமந்தா..

Samantha Kaathuvaakula Rendu Kaadhal Pushpa: The Rise
By Edward Aug 29, 2022 01:47 PM GMT
Report

விண்னைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்திற்கு பிறகு பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினார் சமந்தா.

தமிழ், தெலுங்கு என்று நடித்து ஹைதராபாத், சென்னை என்று ஓடி உழைத்து வந்த சமந்தா 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கணவரின் குடும்பத்தின் அனுமதியோடு நடித்து வந்த சமந்தா சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக கடந்த ஆண்டு சமந்தா, நாக சைதன்யா அறிவித்தனர். அதன்பின் தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸ்-ஐ ஆரம்பித்து க்ளாமர் ரூட்டில் பட்டையை கிளப்பி நடித்தார். அதுவரையில் தன் சம்பளம் 4 கோடிக்கு கீழ் வாங்கி வந்தார்.

சமீபத்தில் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட காரணத்தால் பாலிவுட் வாய்ப்பு வரும் வகையில் மார்க்கெட்டில் உயர்ந்தார். புஷ்பா படத்தில் 5 கோடி வரை சம்பளம் வாங்கிய சமந்தா, அதே 5 கோடியை சம்பளமாக நிர்ணயித்தும் இருக்கிறார்.

இதனால் கமிட்டாகிய படங்களிலும் 5 கோடி சம்பளம் கேட்க தெறித்து ஓடி இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.