6 வருடத்திற்கு பின் விஜய்க்கு ஓகே சொன்ன நடிகை சமந்தா!! தட்டித்தூக்கிய அட்லீ..

Vijay Samantha Allu Arjun Tamil Actress
By Edward Apr 16, 2024 07:45 PM GMT
Edward

Edward

Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் அவரின் விவாகரத்துக்கு பின் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டும் வந்தார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த சமந்தா சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பின் 3 ஆண்டுகள் கழித்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார்.

6 வருடத்திற்கு பின் விஜய்க்கு ஓகே சொன்ன நடிகை சமந்தா!! தட்டித்தூக்கிய அட்லீ.. | Samantha Is In Talks Two Biggies Vijay Alluarjun

அப்படத்திற்கு பின் தீவிர சிகிச்சை மேற்கொண்டு மயோசிடிஸ் நோயில் இருந்து குணமடைந்து மீண்டும் படங்களில் நடித்து வந்தார். சில ஆண்டுகளாக தமிழில் வாய்ப்பு குறைந்து வந்த நிலையில் பாலிவுட் பக்கம் சென்று சிடெடல் படத்தில் நடித்து மிகப்பெரிய இடத்தினையும் மார்க்கெட்டையும் உயர்த்தினார்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்து விஜய்யின் ஃபேவரெட் நடிகையாக இருந்து வந்தார். அதன்பின் விஜய்யுடன் ஜோடிப்போட்டு நடிக்கும் வாய்ப்பு 6 ஆண்டுகளாக கிடைக்கவில்லை.

6 வருடத்திற்கு பின் விஜய்க்கு ஓகே சொன்ன நடிகை சமந்தா!! தட்டித்தூக்கிய அட்லீ.. | Samantha Is In Talks Two Biggies Vijay Alluarjun

இந்நிலையில் நடிகை சமந்தா, தளபதி விஜய்யின் 69வது படத்தினை இயக்கும் எச் வினோத் படத்தில் நடிகை சமந்தா நடிக்கவுள்ளார் என்ற பேச்சு எழுந்துள்ளது. மேலும், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் கூட நடிகை சமந்தா நடிக்கவுள்ளார் என்ற பேச்சும் இணையத்தில் கசிந்துள்ளது.

இதன்மூலம் தமிழ், தெலுங்கு சினிமாவில் மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தவிருக்கிறார் சமந்தா. ஆனால் இதுகுறித்த அதிகார்ப்பூர்வ தகவல் இன்னும் உறுதியாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video