பழைய நிலைக்கு மாறிய நடிகை சமந்தா!! மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் இப்படியொரு வெறித்தனம்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து விவாகரத்து பெற்றார்.
அதன்பின் படங்களில் நடிக்க ஆரம்பித்த சமந்தா, கிளாமர் லுக்கிலும் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார்.
8 மாதங்களாக தான் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக படுத்த படுக்கையில் இருந்து நடக்கமுடியாமல் கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
அதற்கான சிகிச்சைகளும் உடற்பயிற்சிகளும் செய்து வந்த சமந்தா தற்போது தான் பழைய நிலைக்கு மாறி வருகிறார்.
சில நாட்களுக்கு முன் கடுமையான உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்தார் சமந்தா.
மேலும் பழனி முருகன் கோவிலுக்கு சென்று 600 படிகளில் சூடம் ஏற்றி வழிபாடு செய்தார். தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு, தன்னுடைய பழைய நிலைக்கு மாற பாக்ஸிங் பயிற்சி செய்து வருகிறார். அப்போது எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்ததோடு காதலர் தின வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் சமந்தா.