டவலுடன் சமந்தா!! மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் புது அவதாரத்தில் எடுத்த புகைப்படங்கள்..
தமிழில் பாணா காத்தாடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சமந்தா. முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாகிய சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.
திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். இதன்பின் கேரியரில் கவனம் செலுத்தி வந்த சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதித்து கஷ்டப்பட்டு வந்தார்.
தற்போது அதிலிருந்து மீண்டு வர சிகிச்சை மேற்கொண்டும் இடையில் படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. தற்போது கிடைக்கும் நேரத்தில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படத்தையும் மயோசிடிஸ் நோயில் இருந்து விடுபட புத்தகம் படித்தும் வருகிறார்.
சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார் சமந்தா.



