விவாகரத்துக்கு பின் இப்படியொரு மாற்றத்தில் சமந்தா!! ஒரு பக்கம் ஆன்மீகம், மறுபக்கம் போட்டோஷூட்?
தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. அதன்பின் பானா காத்தாடி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார். பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

காதலும் திருமணமும்
ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் நடிகர் சித்தார்த்துடன் காதலில் இருந்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அதன்பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சித்தார்த்தை பிரிந்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்தார். இருவரும் உயிருக்குயிராய் காதலித்து 2017ல் இரு குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்து
4 வருட திருமண வாழ்க்கையில் சினிமாவில் நடித்து வந்த சமந்தா ஒருசில படங்களில் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்ததால் நாக சைதன்யா குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட ஆரம்பித்தது.
இதனால் சமந்தா கடந்த ஆண்டு நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக முடிவெடுத்தார். தற்போது விவாகரத்துக்கு பின் சுதந்திர பறவையாக க்ளாமர் ஆட்டமும், போட்டோஷூட்டிம் எடுத்து இணையத்தினை எகிரவைத்து வருகிறார்.
ஆன்மீகம் - போட்டோஷூட்
சமீபத்தில் தோழிகளுடன் ஆன்மீக பயணம், க்ளாமர் போட்டோஷூட் என்று லைஃப் ஸ்டைலையே மாற்றியுள்ளார். சமீபத்தில் ஈசா மையத்தில் நடைபெற்ற சேவ் சாயில் என்ற் நிகழ்ச்சியில் சத்குருவை பேட்டியெடுத்துள்ளார்.
சேலை அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அடக்கவுடக்கமும் நல்லா இருக்கு என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.