பிரபல நடிகருடன் வெளிநாட்டு ஓட்டலில் நடிகை சமந்தா!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Samantha Vijay Deverakonda
By Edward Jun 01, 2023 09:00 AM GMT
Report

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. தமிழில் பாணா காத்தாடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாகிய சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.

பிரபல நடிகருடன் வெளிநாட்டு ஓட்டலில் நடிகை சமந்தா!! ஷாக்காகும் ரசிகர்கள்.. | Samantha Lunch With Vijay Deverakonda Kushi Shoot

இதன்பின் கேரியரில் கவனம் செலுத்தி வந்த சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதித்து கஷ்டப்பட்டு வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வர சிகிச்சை மேற்கொண்டும் இடையில் படங்களில் நடித்தும் வருகிறார்.

தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் தற்போது துருக்கி நாட்டிற்கு சென்றுள்ளார் சமந்தா.

இந்நிலையில் குஷி படத்தின் கடைசி படப்பிடிப்பினை முடித்துவிட்டு விஜய் தேவரகொண்டாவுடன் லன்ச் சாப்பிடும் புகைப்படத்தை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒருவேல இருக்குமோ என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Gallery