தீராத மயோசிடிஸ் வலிக்கு Cryotherapy!! ஐஸ் பாத் வீடியோவை வெளியிட்ட நடிகை சமந்தா..
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை சமந்தா.
பின் தமிழில் பாணாகாத்தாடி படத்தில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்திருக்கிறார்.
நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த 3 ஆண்டுகளில் விவாகரத்து பெற்று கடந்த 2021ல் பிரிந்தார்.
அதன்பின் படங்களில் கவனம் செலுத்திய போது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து தற்போது மீண்டு வருகிறார்.
"Recovery ? #Cryotherapy" ~@Samanthaprabhu2#Samantha #SamanthaXTheMarvels #SamanthaRuthPrabhu pic.twitter.com/q5tJBNfZKF
— VIRALWEB INDIA (@VIRALWEBINDIA) November 4, 2023
தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள நடிகை சமந்தா சிடடெல் படம் உள்ளிட்ட ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தற்போது மயோசிடிஸ் நோயில் இருந்து விடுபட கிரியோதெரபி சிகிச்சை செய்ய ஐஸ் பாத் எடுக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.




