சமந்தா விவாகரத்துக்கு நாக சைதன்யாவின் இந்த தொடர்பு தான் காரணம்! பிரபல நடிகை சர்ச்சை..

samantha divorce nagachaitanya tamilactress kanganaranaut
By Edward Oct 04, 2021 04:05 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது விவாகரத்து பிரச்சனையில் பேசும் நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. சமீபத்தில் அவர் நடித்து வெளியான தி பேமிலி மேன் 2 சீசன் வெளியானது முதல் பல சர்ச்சையில் சிக்கினார். அதுவும் அப்படத்தில் சர்ச்சை காட்சிகள் அமைந்து குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கியது. அந்த குழப்பம் தற்போது விவாகரத்தில் முடிந்துள்ளது.

நடிகர் நாக சைதன்யாவுன் அவரது மனைவி சமந்தாவும் விவாகரத்து குறித்து எதுவும் பேசாமல் இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் தாங்கல் 10 வருடங்களாக நண்பர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டோம். தற்போது 4 வருட வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், பிரபலங்களும் இதுகுறித்து கருத்துக்களை கூறி வந்தனர்.

இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையாக ஒரு விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதாவது நாக சைதன்யாவுக்கு விவாகரத்துக்கு வழிகாட்டியவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் தான் என்று குறிப்பிட்டுள்ள கங்கனா, அந்த நடிகரை பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று பதிவிட்டு உள்ளார். நடிகர் அமீர்கானை தான் நடிகை கங்கனா ரனாவத் இவ்வாறு சூசகமாக சாடி உள்ளார்.

அமீர்கானும், நாக சைதன்யாவும் ‘லால் சிங் சட்டா’ என்கிற பாலிவுட் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளதாம். மேலும் அந்த நடிகர் குறித்து சில விஷயங்களை மறைமுகமாக தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

GalleryGallery