கணவரைவிட சொத்தை மூன்று மடங்கு வைத்திருக்கும் நடிகை சமந்தா! வைரலாகும் சொத்துமதிப்பு விவரம்..

samantha property nagachaitanya
By Edward May 12, 2021 11:18 AM GMT
Report

தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறப்பு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகி பானா காத்தாட்டி படத்தின் மூலம் கதாநாயகியாக் ஆரம்பித்தவர் நடிகை சமந்தா.

இதையடுத்து, நடுநிசி நாய்கள் ஆரம்பித்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தார். இதைதொடர்ந்து 11 வருடங்களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்தார்.

இருப்பினும் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து சினிமாவிற்கு விடைபெறுவார் என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது கையில் பல படங்களை வைத்து கொண்டிருக்கும் சமந்தா கொரானா வைரஸ் காரணமாக படப்பிடிப்பிற்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா மற்றும் அவரது கணவரின் சொத்துமதிப்பு வெளியாகியுள்ளது. சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 133 கோடி என்றும்நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு 38 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நாக சைதன்யாவைவிட தமிழ், தெலுங்கு மொழிப்படங்களிலும் இன்ஸ்டாகிராம், விளம்பரம், நிகழ்ச்சி தொகுப்பு என மொத்தம் 85 கோடி சொத்து மதிப்பில் வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.