எனக்கு அதுதான் முக்கியம்! நயன்தாரா - விக்கி கல்யாணத்தை தூக்கி எறிந்த நடிகை சமந்தா..
தென்னிந்திய சினிமாவில் இரு முன்னணி நடிகைகளாக திகழ்ந்து அடுத்தடுத்த படங்களை கையில் கொண்டு பிஸியாக இருந்து வருபவர் நடிகை நயன் தாரா மற்றும் சமந்தா. இருவரும் இணைந்து பல ஆண்டுகள் கழித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தின் மூலம் இருவருக்கு ஏற்பட்ட நட்பு ரீதியான உறவு பற்றி விக்னேஷ் சிவன் சில பேட்டிகளில் நல்ல விதமாக பகிர்ந்து கொண்டார். அப்படி இருவரும் படப்பிடிப்பு தளத்தில் ஈகோ இல்லாம ல் நடித்து கொடுத்தது தான். இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன் தாராவின் காதல் திருமணம் நாளை மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு ரெசாட்டில் நடைபெறவுள்ளது.
இதற்காக முக்கிய நட்சத்திரங்கள் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்க தகுந்த பாதுகாப்புடன் நடைபெற திட்டமிட்டுள்ளது. திருமணத்திற்கான சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா நயன் - விக்கி திருமணத்தை தவிர்த்திருக்கிறாராம்.
தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடிப்போட்டு நடித்து வரும் குஷி படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார் நடிகை சமந்தா. அப்படி திருமணத்திற்கு சென்றால் படக்குழுவினருக்கு இழப்பு ஏற்படக்கூடும் என்பதால் தான் சமந்தா திருமணத்துக்கு செல்லவில்லையாம்.
வரும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சமந்தா தற்போது தனிப்பட்ட வாழ்க்கையைவிட சினிமா தான் முக்கியம் என்று இருந்து வருவதால், திருமணத்திற்கு பின் நயன் - விக்கியை சந்திக்க முடிவெடுத்துள்ளாராம்.