தாய்மை வரம் எனக்கும் கிடைக்கும்.. ஓப்பனாக ஒப்புக்கொண்ட நடிகை சமந்தா!

Samantha Tamil Cinema Actress
By Bhavya Sep 12, 2025 07:30 AM GMT
Report

சமந்தா

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

தாய்மை வரம் எனக்கும் கிடைக்கும்.. ஓப்பனாக ஒப்புக்கொண்ட நடிகை சமந்தா! | Samantha Open Talk About Becoming Mother

ஓபன் டாக்! 

இந்நிலையில், சமந்தா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், "என் வயதை பற்றி என் நலம் விரும்பிகள் கவலைப்படுகிறார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் அதற்காக நான் தாய்மையடைய தாமதமாகி போகிறது என்று நினைக்க வேண்டாம்.

ஒரு தாயாக வேண்டும் என்ற என் கனவு இன்னும் அப்படியே தான் உள்ளது. அந்த அழகான அனுபவத்தை எதிர்நோக்கி நான் ஆவலாக காத்திருக்கிறேன்.

ஒரு பெண் நினைத்தால், அவள் தாயாக முடியாத நேரம் என்று வாழ்க்கையில் எதுவும் இல்லை. தாய்மை என்பது வரம். அது எனக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.  

தாய்மை வரம் எனக்கும் கிடைக்கும்.. ஓப்பனாக ஒப்புக்கொண்ட நடிகை சமந்தா! | Samantha Open Talk About Becoming Mother