விஜய்யுடன் 4வது முறையாக கைகோர்க்கும் 37 வயது நடிகை.. யார் தெரியுமா
Vijay
Samantha
By Karthick Raja
நடிகர் விஜய் GOAT திரைப்படத்தை தொடர்ந்து நடிக்கவிருக்கும் படம் தான் தளபதி 69. இப்படம் தான் அவருடைய கடைசி படம் என சொல்லப்படுகிறது.

தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை. நடிகை சமந்தா தான் விஜய்க்கு இப்படத்தில் ஜோடி என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் விஜய்யுடன் சமந்தா இணைந்து நடித்துள்ள நிலையில், தளபதி 69 மூலம் இந்த ஜோடி 4வது முறையாக திரையில் இணையவுள்ளதாக பேசப்படுகிறது.