நான் இப்படி செய்வேன்னு நினைக்கவே இல்லை.. அரியவகை நோயால் புலம்பும் நடிகை சமந்தா
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. அந்த படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.
இதனையடுத்து தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார் சமந்தா.

அதன்பின் கிளாமரில் குத்தாட்டம், போட்டோஷூட் என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு myositis என்ற அரியவகை நோய் இருப்பதாக புகைப்படத்துடன் மருத்துவமனை புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.
இந்த விசயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமந்தாவுக்கு ஆபத்தான நோய் என்றெல்லாம் இணையத்தில் பேசப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தா, நான் இன்னும் சாகவில்லை என்று கூறியிருந்தார்.
யசோதா படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், அப்படத்தில் சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் சமந்தா. சண்டைக்காட்சிகளைவிட கிளாமர் காட்டி நடிப்பதும் போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை வெளியிடுவதும் தான் கஷ்டம் என்று கூறியிருக்கிறார். மேலும் சண்டைக்காட்சியில் நடித்தது சவாலானதாகவும் நான் இப்படி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.