தீவிர மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் வைரலாகும் நடிகை சமந்தாவின் நியூ கிளாமர் லுக்!! புகைப்படம்..
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா.

கோடியில் சம்பளம் வாங்கி வந்த நடிகை சமந்தா 2017ல் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
விவாகரத்துக்கு பின் படங்களில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, 8 மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு நடக்ககூட முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
அதன்பின் தீவிர சிகிச்சை உடற்பயிற்சி மேற்கொண்டு அதிலிருந்து மீண்டு வருவதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

தற்போது இந்த மாதம் வெளியாகவுள்ள சாகுந்தலம் படத்தின் பிரமோஷனுக்காக அங்கும் இங்கும் சென்றும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்தும் வருகிறார்.
தற்போது Rise up baby என்ற கேப்ஷனை பகிர்ந்ததோடு மேக்கப் போடும் கிளாமர் போட்டைவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் சமந்தாவை உற்சாகப்படுத்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.