மேடையில் இப்படியா சொல்றது!! பிரபல நடிகரை திருமணம் செய்ய பிரபோஸ் செய்த நடிகை சமந்தா.

Samantha Sathish
By Jai Oct 16, 2022 10:16 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 10 ஆண்டுகள் நிறைவு செய்து கலக்கி கொண்டு வருபவர் நடிகை சமந்தா.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் ஜோடிப்போட்டு ஆரம்பித்த சமந்தா, அவருடனே 2017ல் திருமண வாழ்க்கையை ஆரம்பித்தார்.

நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு விவாகரத்து முடிவை கையில் எடுத்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கான காரணம் எதுவும் கூறாமல் தன் வேலையை பார்த்து வரும் சமந்தா, கிளாமரில் ரசிகளை வாய்ப்பிளக்க வைத்து தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட் வரை சென்றுள்ளார்.

இந்நிலையில் சமந்தாவின் பழைய பிரபோஷ் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் கத்தி படத்தின் ஆடியோ லான்ச் விழாவின் போது காமெடி நடிகர் சதீஷை கூப்பிட்டு, சதீஷ் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று மேடையில் அப்படியே கூறியிருந்தார்.

சமந்தா இணையத்தில் எந்த பதிவும் போடாததால் பழைய வீடியோக்களை பகிர்ந்து வருவதை போன்று இந்த வீடியோவையும் ரசிகர்கள் வைரலாகியுள்ளனர்.