மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் இரண்டாம் திருமணம்!! சாமியார் பேச்சை கேட்டு ஆடும் நடிகை சமந்தா...
தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி அதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா.
இப்படத்தினை தொடர்ந்து பாணா காத்தாடி படத்தில் தமிழில் நடிக்க ஆரம்பித்து குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றார். அதன்பின் நடிகர் நாக சைதன்யாவுடன் நெருக்கமாக நடித்து அவரை காதலித்து கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார்.
[CXN08 ]
திருமணமாகி 4 ஆண்டுகளில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2021ல் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். அதன்பின் நடிகை சமந்த நடிப்பில் கவனம் செலுத்தி மிகப்பெரிய உச்சத்தை அடைந்தார். சமீபத்தில் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார்.
பல மாதங்களாக அதற்கான சிகிச்சை பெற்று வந்த சமந்தா இடையில் நடித்தும் வந்தார். அவர் நடிப்பில் சாகுந்தலம் படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தின் நடிகர் இயக்குனருடன் கோவிலுக்கு சென்று பூஜை செய்து வந்தார்.
இந்நிலையில், நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சத்குரு ஜக்கி வாசுதேவின் சிசியை-ஆக இருக்கும் சமந்தா அவர் பேச்சை கேட்டு நடந்து வருகிறார்.
அப்படி சத்குரு கொடுத்த அட்வைஸ்-ஆல் தனது இரண்டாம் திருமணம் குறித்து யோசித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய தயாராகவும் இருக்கிறாராம் நடிகை சமந்தா. இத்தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
ஏற்கனவே திருமண வாழ்க்கையை பற்றி முகம் சுளித்து பல பேட்டிகளில் பேசி வரும் சமந்தா அப்படியேதும் செய்யமாட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
