விஜய் சேதுபதியா வேண்டவே வேண்டாம் என ஒதுக்கிய நடிகை சமந்தா! ரூட்டை மாற்றிய இயக்குனர்..

Vijay Sethupathi Samantha Kaathuvaakula Rendu Kaadhal
By Edward Apr 27, 2022 07:11 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை 28 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ரிலீசாகவுள்ள இப்படம் ரெண்டு காதலிகளை எப்படி காதலன் சமாளித்து வாழ்க்கையை வாழ்கிறார் என்பதை மையப்படுத்திய களமாக இருக்கிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று நடிகை சமந்தா கூறிய செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. நானும் ரெளடி தான் படத்தில் நயன் தாரா எப்படி நடித்து ஹிட் அடித்ததோ அதேபோல் விஜய் சேதுபதி நடிப்பில் நல்ல வரவேற்பு பெற்ற படம் காதலும் கடந்து போகும்.

சூப்பர் டீசக்ஸ் படத்திற்கு பிறகு சமந்தாவும் விஜய் சேதுபதியும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்துள்ளனர். அப்படி காதலும் கடந்து போகும் படத்தில் முதல் இயக்குனர் சமந்தாவிடம் கால்ஷீட் கேட்டாராம்.

ஆனால் சமந்தா அதற்கு வேண்டவே வேண்டாம் என்று மறுத்துள்ளாராம். அப்போதைய சமயத்தில் விஜய் சேதுபதி வளர்ந்து வரும் நடிகராக இருந்ததால் சமந்தாவிற்கு இதெல்லாம் செட்டாகாது என தோன்றி மறுத்துள்ளாராம்.

இதனால் பலமுறை கேட்டும் பலனளிக்கவில்லை என்று இயக்குனர் நடிகை மடோனா செபாஸ்டினை ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்தார். படம் நல்ல வரவேற்பு பெற்றதை நினைத்து சமந்தா மிஸ் செய்துவிட்டோமே என்று வருத்தப்பட்டுள்ளாராம்.