சமந்தாவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை? கிடைத்த கேப்பில் ஷாருக்கானுக்கு ரூட்டை போட்ட நயன்!!

Nayanthara Samantha Shah Rukh Khan Atlee Kumar
By Edward Jun 06, 2022 09:51 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன் தாரா, விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். நயன் தாராவின் நடிப்பை தாண்டி சமந்தா தான் ரசிகர்கள் மத்தியில் ஈர்த்திருந்தார்.

அட்லீ இயககத்தில் ஷாருக்கான், நயன் தாரா இணைந்து நடித்து வரும் ஜவான் படத்தில் முதலில் நயனுக்கு முன்னதாக சமந்தாவிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால் ஒருசில காரணங்களால் சமந்தா அப்படத்தினை ஒதுக்கியுள்ளார்.

அதற்கு காரணம் தெறி படத்தின் போது சமந்தாவுக்கும் அட்லீக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அட்லீ 2019ல் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது தனிப்பட்ட காரணத்திற்காக நடிக்க மறுத்திருக்கிறார்.

இதனை பயன்படுத்திய நயன்தாரா கோடி சம்பளத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஜவான் படத்தில் நயன் தாரா விசாரணை அதிகாரியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.