திடீரென கணவர் பெயரை அகற்றிய நடிகை சமந்தா! அதற்கு முதல்படியாக இருக்குமோ..
samantha
nagachaitanya
tamilactress
akkineni
By Edward
வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் ஆரம்பித்து தெலுங்கில் அப்படத்தின் ரீமேக்கில் திரிஷா ரோலில் நடித்து பிரபலமானார். குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பு போட்டோஹூட் என கலக்கி வரும் சமந்தா சமீபத்தில் தி பேமிலி மேன் 2 படத்தில் போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றார்.
இந்நிலையில், சமந்தாவின் சமுகவலைத்தளமான இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட பக்கங்களின் பெயரான சமந்தா அக்கினேனி என்பதை தற்போது S என்று மாற்றியுள்ளார். இதன் காரணம் என்ன என்று பலரும் குழம்பி வருகிறார்கள். சிலர் விவாகரத்தா? என்றும் கேட்டு வருகிறார்கள்.
