நடிகையோடு டேட்டிங் செல்லும் நாக சைதன்யா? - கடுப்பில் சமந்தா போட்ட பதிவு

Samantha Naga Chaitanya Viral Photos
By Edward Jun 21, 2022 08:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் விண்ணத்தை தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்து பின் அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா.

சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். பாணா காத்தாடி படம் முதல், யசோதா, குஷி படம் வரை தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

நடிகையோடு டேட்டிங் செல்லும் நாக சைதன்யா? - கடுப்பில் சமந்தா போட்ட பதிவு | Samantha Reply Naga Chaitanya Love Rumours

கணவருடன் விவாகரத்து

பல படங்களில் ஒன்றாக நடித்த நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். திருமணத்திற்கு பிறகு கணவரின் அனுமதியுடன் படங்களில் நடித்து வந்த சமந்தா போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

இதனால் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது தனிமையில் வாழ்ந்து வரும் சமந்தா க்ளாமர் போட்டோஷூட், எல்லைமீறிய நடிப்பு, ஆன்மிகம் என்று சுதந்திர பறவையாக சுற்றி வருகிறார்.

நாக சைதன்யா காதல் வதந்தி

படங்களில் நடித்து வரும் நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலா என்பவருடன் ரகசிய காதலில் இருந்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியது. சமுகவலைத்தளத்தில் இது குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்தது.

நடிகையோடு டேட்டிங் செல்லும் நாக சைதன்யா? - கடுப்பில் சமந்தா போட்ட பதிவு | Samantha Reply Naga Chaitanya Love Rumours

சமந்தா காரணமா

இந்த வதந்திக்கு சமந்தா தரப்பு தான் காரணம் என்று விவாகரத்து காரணம் சமந்தா என்று ஒருசிலர் கேள்வியாக கேட்டுள்ளனர்.

இதற்கு கோபத்தில் பதிலளித்த சமந்தா, பெண்கள் மீதான வதந்திகள் என்றால் அது உண்மையானது. ஆண்கள் மீதான வதந்திகள் என்றால் அது பெண்களால் உருவானது. கொஞ்சமாவது வளருங்கள். சம்மந்தப்பட்டவரே அமைதியாக கடந்து சென்றுவிட்டனர்.

நீங்களும் கடந்து செல்லுங்கள். உங்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள், கடந்து போங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு சமந்தாவிற்கு ரசிகர்கள் பாராட்டியும் ஆதரவாகவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Gallery