அவர் வாங்கி கொடுத்த கிஃப்ட்!! நாக சைதன்யா பற்றி வாய்த்திறந்த நடிகை சமந்தா..

Samantha Naga Chaitanya Gossip Today Tamil Actress
By Edward Jul 10, 2024 06:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒருசில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அதற்கான காரணம் என்ன என்று பலவிதமாக பேச்சுக்கள் எழுந்தது.

அவர் வாங்கி கொடுத்த கிஃப்ட்!! நாக சைதன்யா பற்றி வாய்த்திறந்த நடிகை சமந்தா.. | Samantha Revealed Best Gift Received Ex Husband

அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் சமந்தா படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார். விவாகரத்துக்கு பின் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வர பல சிகிச்சை முறைகளை பயன்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் கூட சர்ச்சையான சிகிச்சையை பரிந்துரை செய்கிறார் என்று சமந்தா மீது விமர்சனங்கள் எழுந்தது. அதற்கான விளக்கத்தையும் நடிகை சமந்தா கொடுத்திருந்தார்.

அவர் வாங்கி கொடுத்த கிஃப்ட்!! நாக சைதன்யா பற்றி வாய்த்திறந்த நடிகை சமந்தா.. | Samantha Revealed Best Gift Received Ex Husband

சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு பிடித்த பொன்மொழியை அவர் கையால் எழுதி கையாலேயே வரைந்த ஒரு பையை பரிசாக கொடுத்தார், எது என்னை ரொம்பவும் கவர்ந்தது என்று நாக சைதன்யா பற்றி பகிர்ந்துள்ளார்.