திருமணமாகி 3 வருஷம் ஆச்சி! அந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய ஆசைப்படும் நடிகை சமந்தா..
தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகள் வரிசையில் டாப் 5ல் இருப்பவர் நடிகை சமந்தா. சென்னை பூர்வீக நடிகையாக சிறு கதாபாத்திரம் மூலம் ஆரம்பித்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இலங்கை மக்களின் போராட்டம் குறித்த தி பேமிலி மேன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி சர்ச்சையில் சிக்கியது.
படத்தினை வெளியிட சிலர் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் பிரமோஷன் குறித்த பேட்டியொன்றில் யாருடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஆசை என்று கேள்வி எழுந்தது. அதற்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். பாலிவுட் பக்கம் இதுவரை செல்லாத சமந்தாவின் ஆசையை கேட்டு ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.