37 வயதாகும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு.. பல பிரச்சனைகள் தாண்டி தனி ஆளாக உருவாக்கிய சாம்ராஜ்யம்

Samantha Indian Actress Actress
By Kathick Apr 29, 2024 03:30 AM GMT
Kathick

Kathick

Report

நடிகை சமந்தா தற்போது இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக முன் தென்னிந்திய அளவில் மட்டுமே வலம் வந்த இவர், தி பேமிலி மேன் 2 வெப் தொடரின் மூலம் பாலிவுட் பக்கம் கவனம் பெற்றார்.

இதை தொடர்ந்து சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் மூலம் உலகளவில் சமந்தாவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஹாலிவுட் பட வாய்ப்புகள் கூட சமந்தாவை தேடி வருகிறது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் 37 வயதை கடந்துள்ள நடிகை சமந்தா, இதுவரை சேர்த்து வைத்துள்ள சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

37 வயதாகும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு.. பல பிரச்சனைகள் தாண்டி தனி ஆளாக உருவாக்கிய சாம்ராஜ்யம் | Samantha Ruth Prabhu Net Worth And Assets

மேலும் இவருக்கு மும்பை மற்றும் ஹைதராபாத்தில் சொந்தமாக சொகுசு வீடுகள் உள்ளதாம். இதில் ஹைதராபாத்தில் உள்ள வீட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 7 கோடியாகும் என்கின்றனர். மேலும் சாஹி எனும் ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் விலையுயர்ந்த சொகுசு கார்களும் உள்ளது.

2010ல் தனது திரை வாழ்க்கையை துவங்கிய சமந்தா, பல விமர்சனங்கள், விவாகரத்து, மயோசிட்டிஸ் பாதிப்பு என பல இன்னல்களை தாண்டி இன்று தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.