மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தை இழந்தேன்..சமந்தா ஓபன் டாக்..

Samantha Gossip Today Tamil Actress Actress
By Jai Sep 12, 2026 03:30 AM GMT
Report

நடிகை சமந்தா பாலிவுட் ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். அதில், மயோசிடிஸ் நோயால் நான் பாதிகப்பட்டிருந்த போது என் அடையாளத்தை நான் இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்.

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தை இழந்தேன்..சமந்தா ஓபன் டாக்.. | Samantha Says Felt Loss Of Identity After Myositis

மயோசிடிஸ் நோயால்

என்னுடைய கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. மன உறுதி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற முக்கியமானக் குணங்களை இந்த நோய் எனக்கு கற்றுக் கொடுத்தது. இதனால் என் வாழ்க்கை இன்னும் மேம்பட்டு இருக்கிறது.

இந்த நோய் எனக்கு வராமல் இருந்திருக்கலாம் என்று நான் நினைத்திருக்கிறேன், ஆனால் இது எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் என் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற அங்கமாக மாறிவிட்டது.

ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும் என்கிற கட்டத்தை நான் கடந்து, இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள ஏதோ இருக்கிறது என்ற தெளிவை அடைய எனக்கு சிறிது காலம் எடுத்துக் கொண்டது என்று பகிர்ந்துள்ளார் சமந்தா.