நடிப்பை தாண்டி தொழிலதிபராகவும் சாதனை படைத்த சமந்தா.. ரூ. 100 கோடிக்கும் மேல் வருவாய்
நடிகை சமந்தா
இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மா இண்ட்டி பங்காரம் திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து கரம்பிடித்தார். இதன்பின், தான் கர்ப்பமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் ரசிகர்களிடம் கூறினார். இதனால் சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகவும் முடிவு செய்தார் சமந்தா. என்னதான் சினிமாவிலிருந்து விலகி இருந்தாலும், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார்.
தொழிலதிபராக ஜொலிக்கும் சமந்தா
நடிகை சமந்தா நடிப்பை தாண்டி தொழிலதிபராகவும் மாபெரும் சாதனை செய்துள்ளார். Saaki, Tralala Moving Pictures போன்ற நிறுவனங்களை சமந்தா நடத்தி தொழிலதிபராக வலம் வருகிறார் என்பதை பலரும் அறிவர். இதில் Secret Alchemist எனும் வாசனை திரவிய நிறுவனத்தில் இவர் இணை நிறுவனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகு மற்றும் நறுமண பொருட்களில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்த சமந்தா 2 ஆண்டுகள் அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கையான நறுமண பொருட்களை உருவாக்கும் நோக்கில் அங்கிதா ததானி மற்றும் ஆகாஷ் வாலியா ஆகியோருடன் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிலையில், இந்த நிறுவனம் தொடங்கிய 8 மாதங்களிலேயே ரூ. 120 கோடி வருவாய் ஈட்டியுள்ளார் நடிகை சமந்தா. சினிமாவில் மட்டுமின்றி தொழிலதிபராகவும் சமந்தா படைத்துள்ள இந்த சாதனையை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகிறார்கள்.