விவாகரத்தாகி 2 வருடத்திற்கு பின் மாஜி கணவருடன் நடிகை சமந்தா!! அவரே வெளியிட்ட புகைப்படம்..
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாகினார். நடிகர் நாக சைதன்யாவுடன் பல படங்களில் ஜோடிப்போட்டு நடித்து வந்த சமந்தா, சித்தார்த்தை பிரிந்த பிறகு நாக சைதன்யாவை காதலித்தார்.

அதன்பின் 2017ல் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடித்து வந்தார். 4 ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
விவாகரத்துக்கு பின் படங்களில் நடித்து வந்த சமந்தா புஷ்பா படத்தில் ஐட்டம் பாடல் மூலம் இந்தியளவில் பிரபலமானார். கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அதிலிருந்து மீள முடியாமல் கஷ்டப்பட்டார்.
கடின உடற்பயிற்சி தீவிர மருத்துவ சிகிச்சை செய்து தற்போது மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதற்கிடையில் சாகுந்தலம், குஷி, இந்தி வெப் தொடர் என்று படங்களில் நடித்தும் வருகிறார்.

அவர் நடிப்பில் சாகுந்தலம் படம் ஏப்ரல் 14ல் வெளியாகவுள்ள நிலையில், அதன் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் 4 வருடங்களுக்கு முன் நாக சைதன்யா, சமந்தா நடிப்பில் மஜிலி என்ற படம் வெளியானது.
இப்படத்தின் 4 ஆண்டுகள் வெளியான நிலையில் மஜிலி படத்தின் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார். அவருடன் மாஜி கணவர் நாக சைதன்யாவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
#4YearsofMajili ♥️ https://t.co/uWcftyByex
— Samantha (@Samanthaprabhu2) April 5, 2023