விவாகரத்துக்கு முன்பே இவரோடு சேர்ந்து இந்த செயல்! யாரும் கண்டிராத நடிகை சமந்தாவின் மறுமுகம்!!
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்தாலும் அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் நோடியாக நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பின் தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வந்த சமந்தா விஜய், விஜய்சேதுபதி, சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், நானி, என் டி ஆர் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக திகழ்ந்து வந்த சமந்தா நாக சைதன்யாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். எங்கு போனாலும் கணவர் புராணம் பாடி வந்த சமந்தா, கணவர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இதற்கான காரணம் பலவிதமாக கூறப்பட்ட நிலையில், விவாகரத்துக்கு பின் க்ளாமரில் தாராளம் காட்டி நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் புஷ்பா, காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் எல்லைமீறி நடித்தும் ஆடியும் போட்டோஷூட்டில் வரம்புமீறிய புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.
தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வரும் சமந்தா ஹைதராபாத்தில் இருக்கும் சமந்தா, தான் நடத்தி வரும் Ekam - Early Learning Centre-க்கு சென்றுள்ளார்.
தன் தோழிகளான ஷில்பா செட்டி, முக்தா குரானாவுடன் இணைந்து இந்த பள்ளியை நடத்தி வருகிறார்கள். 9 மாத குழந்தைகளில் இருந்து 3.5 வயதான குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட பல விசயங்களை கற்றுத்தந்து வருகிறார்கள்.