ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை சமந்தா.. மிரண்டு வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்...

Samantha
By Edward Aug 31, 2022 09:21 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சமந்தா.

கடந்த இரு மாதங்களாக இணையத்தில் ஆக்டிவாக இருப்பதை தவிர்த்து வருகிறார். க்ளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு வந்த சமந்தா இணையத்தில் காணாமல் போனது ரசிகர்களை ஏமாற்றி வந்தது. தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் யசோதா படத்தில் டீசர் வெளியீட்டு அறிவிப்பை பதிவிட்டுள்ளார்.

ஆள் அடையாளம் தெரியாமல் ரத்தக்காயத்துடன் கோபத்தில் இருப்பது போல் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள். தி பேமிலி மேன் படத்திற்கு பிறகு சோலோ நடிகையாக நடித்துள்ளார் சமந்தா. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 5.49 மணிக்கு அதன் டீசர் வெளியாகவுள்ளது.