முதன் முறையாக இரண்டாம் திருமணம் குறித்து பேசிய சமந்தா!! வைரலாகும் பதிவு

Samantha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 18, 2023 08:04 AM GMT
Report

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். இவர் நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இந்த ஜோடி சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் இருவருமே சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வந்து கொண்டு இருக்கிறார்கள்.

முதன் முறையாக இரண்டாம் திருமணம் குறித்து பேசிய சமந்தா!! வைரலாகும் பதிவு | Samantha Speak About Second Marriage

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று சமந்தாவிடம் ரசிகர் ஒருவர், நீங்கள் இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்களா ? என்று கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் அளித்த அவர், "அது தவறான முடிவு. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து 50 சதவீதம். இரண்டாவது திருமணம் செய்தவர்களின் விவாகரத்து 67 சதவீதம், மூன்றாவது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து 73 சதவீதம்" என்று சமந்தா கூறியுள்ளார்.