தனுஷ்க்கு நடந்ததை போல் சமந்தாவுக்கு நடக்குதே!! நம்பி குதித்த இயக்குனர்கள்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு பின் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து பாலிவுட் இரட்டை இயக்குனர்கள் ரூசோ சகோதர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கும் வெப் தொடரில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் போஸ்டர் இணையத்தில் சமந்தா வெளியிட்டார்.
அரியவகை நோயான மயோசிடிஸ்-ல் இருந்து குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பி சமந்தா, கிளாமர் போஸ் கொடுத்த அந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் தனுஷை வைத்து தி கிரே மேன் படத்தினை இயக்கிய ரூசோ சகோதரர்கள், நடிகை சமந்தாவின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லவுள்ளனர்.
எப்படி தனுஷிற்கு தி கிரே மேன் படம் மிகப்பெரிய இடத்தை கொடுத்ததோ, அதேபோல் நடிகை சமந்தாவுக்கு கிடைக்கவிருக்கிறது. பல கஷ்டங்களை தகர்த்தி முன்னேறும் சமந்தாவுக்கு பலர் ஆறுதலாகவும் பாராட்டியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
